Abstract Paper
Title | : பத்துப்பாட்டில் நெய்தல் நில வழிபாடு |
---|---|
Article Information | : Volume 1 - Issue 1 (May - 2017) , 21-27 |
Affiliation(s) | : SHC TPT |
Abstract :
நெய்தல் நிலத்தின் தெய்வம் வருணன். வருணன் என்பது மழைக்கடவுடைக் குறிக்கும். இதனை, ‘வருணன் மேய பெருமணல் உலகமும்’ (தொல். அகம். 5) என்று தொல்காப்பிய நூற்பாவால் அறியலாம். அந்நிலத்தில் வாழும் மக்கள் நுளையர், திமிலர், பரதவர், நுளைத்தியர், பரத்தியர் ஆவர். பரதவர்கள் வருணனை வணங்கினாலும், கடற்கரைப் பகுதியில் நகரங்கள் அமைந்துள்ளதால், பல்வேறு இனம், மொழி, சமயம் போன்ற கலாச்சாரங்களால் பலவித தெய்வ வழிபாடுகள் அங்கு நிலவுகின்றன. “குமரி நாட்டில் மாந்தன் மலைப்பகுதிகளில் முதலில் தோன்றி வளர்ந்த போது மேற்றிசைக் கடலே அருகிலிருந்தது. ஆதலால் கடல் தெய்வமாகிய வருணன் மேற்றிசைத் தெய்வமாக வணங்கப்பட்டான். தமிழர் கடலைச் சார்ந்து அதில் கலஞ்செலுத்தி வாழ்ந்த தொன்மையான வரலாற்றைச் சுட்டுவதாகும். பாம்பால் தீங்கு நேர்வதறிந்து அதனைத் தெய்வமாக வணங்கும் வழக்கம் வந்திருப்பது போன்றே கடலால் நேரும் துன்பம் கண்டு வருண வழிபாடு தோன்றியிருக்கக் கூடும். கடல்கோள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை உண்டாதலால் கடல்கோளுக்கு அஞ்சி வருணனை வழிபட்டனர் என்பதைவிட, கடலில் மீன்வேட்டத்தின் காரணமாகவும், கடற்பயணத்தின் காரணமாகவும் நேரும் துன்பங்களுக்கு அஞ்சி வருணன் வழிபாடு மேற்கொண்டனர் என்பதே பொருந்தும்" (இரா.மதிவாணன், கடல்கொண்ட தென்னாடு முதல் சிந்துவெளி வரை, ப.143). நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் பல்வேறு வழிபாட்டினை மேற்கொண்டுள்ளனர் என்பதை பின்வரும் கட்டுரை மூலம் அறியலாம்.
Keywords | : |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : December 19, 2017 |