Abstract Paper
Title | : தொல்காப்பியத்தில் ஊழ்வினைக் கோட்பாடுகள். |
---|---|
Article Information | : Volume 1 - Issue 1 (May - 2017) , 55-60 |
Affiliation(s) | : SHC TPT |
Abstract :
உடலெடுத்த உயிர்கள் அவ்வுடலைக் கொண்டு செய்யும் செயல்கள் வினைகளாகும். கன்மமாகிய இவ்வினைகள் உயிர்கள் செய்யும் தன்மைக்கேற்ப நல்வினை, தீவினை என இரண்டாய் நிற்கும். உயிரின் தோற்றக் காலந்தொட்டு கன்மம் உயிர்களைப் பற்றியுள்ளது. இது தோற்றக் கேடுகளற்றது. கன்மம் என்னும் சொல்லுக்குச் செயல் என்பது பொருளாகும். கன்மம் தமிழில் வினையெனக் குறிக்கப்பெறுகிறது. கன்மம், கருமம், வினை, செயல், தொழில் என்பன ஒரு பொருளன. ஆணவமலச் சேர்க்கையால் உயிர்கள் செய்யும் வினைகளின் தொகுப்பே கன்மம் என்பது. உருவமுடைய உடலால் செய்யப்பெறும் வினை அருவத்தன்மை வாய்ந்தது. ‘அருவாய வல்வினை’ என்பது அப்பர் வாக்கு. வினையின் காரணமாக உயிர்கள் பிறவியில் சுழல்கின்றன. வினைப்பயனை நுகரும் உயிர்கள், பொருள்களின் மீது விருப்பும் வெறுப்பும் கொள்வதால் மீண்டும் பிறவிக்கு உள்ளாகின்றன. வினைப் பிறவிக்கும், பிறவி வினைக்கும் காரணமாகிப் பிறவி தொடர்கிறது.
Keywords | : |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : December 19, 2017 |