Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : திருப்பத்தூர் வட்டார தொல்லியல் களங்கள் (பகுதி - 2)
Article Information : Volume2 - Issue1 (June - 2018) , 11-17
Affiliation(s) : Assistant Professor

Abstract :

தமிழக வரலாற்றை அறிய உதவும் சான்றுகளான இலக்கியத் தரவுகள், சாசனங்கள், ஓவியங்கள், சுவடிகள், நாணயங்கள், வெளிநாட்டார் குறிப்புகள் எனப் பலதரப்பட்ட தரவுகள் இருந்தாலும் இவற்றில் முக்கிய இடம் வகிப்பது கல்வெட்டுகளும், நடுகற்களுமேயாகும். காலத்தால் அழியாது நிலைத்து நின்று உண்மையினை உரக்கச் சொல்லும் நம்பத்தகுந்த சான்றுகளாக இவை திகழ்கின்றன. அவ்வகையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு காலகட்டங்களில் ஆய்வுகள் பல நிகழ்த்தி சான்றாதரங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இருப்பினும் அன்மைக்காலங்களில் எஞ்சியுள்ள பல தடயங்கள் இனங்காணப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் எண்ணற்ற தொல்லியல் சுவடுகள் நிறைந்திருப்பதனை கள ஆய்வுகள் வாயிலாக அறியமுடிகின்றது. இவை யாவும் இன்னும் பதிவு செய்யப்படாதவை என்பது சிறப்புக்குறியதாகும். அங்ஙனம் மேற்கொண்ட கள ஆய்வில் பெறப்பட்ட தொல்லியல் சுவடுகளை இக்கட்டுரை முன்வைக்கின்றது.


Keywords : தொல்லியல்
Document Type : Research Paper
Publication date : June 02, 2020