Abstract Paper
Title | : செந்தமிழ்ச்செல்வி இதழின் புதுக்கவிதைகளின் சிறப்பியல்புகள் |
---|---|
Article Information | : Volume2 - Issue1 (June - 2018) , 22-29 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
அறிவியல் உலகின் வளர்ச்சியில் இன்றைய இலக்கியங்களின் நோக்கும் போக்கும் எதிர்கால முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் அமைகின்றன. புராணம், காப்பியம் மற்;றும் பிரபந்த மரபிலிருந்து மேற்கத்திய நாட்டுத்தாக்கத்தின் காரணமாகத் தமிழில் நவீனவகை இலக்கியங்கள் தோன்றின. கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், கட்டுரை என்னும் ஐந்தும் இருபதாம் நூற்றாண்டின் ஏற்றமிகு இலக்கிய வகையாகும். இலக்கிய வளர்ச்சிக்கு பலத்துறைகள் பங்காற்றி இருந்தாலும், அதில் இதழியல் துறைக்கு முக்கியப்பங்குண்டு. தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரின் கொள்கைகளைப் பரப்புவதற்காகச் செந்தமிழ்ச்செல்வி என்ற இலக்கியத் திங்கள் ஏட்டினை வ.சுப்பையா பிள்ளை 1923-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பெற்றது. தமிழ்மொழி வளர்ச்சிக்கு பல்வேறு நிலைகளில் இவ்விதழ் பங்காற்றியது. அவ்வகையில், செந்தமிழ்ச்செல்வி இதழில் வெளிவந்த புதுக்கவிதைப் படைப்பாளர்களின் எண்ணப்பதிவுகளை எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
Keywords | : இதழியல் |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : June 02, 2020 |