Abstract Paper
Title | : சவ்வாதுமலை வாழ் மக்களின் தெய்வ நம்பிக்கைகள் |
---|---|
Article Information | : Volume 2 - Issue 2 (November - 2018) , 60-66 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
இந்தியாவின் பழமைமிகு மலைகளில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. இக்கிழக்குத் தொடர்ச்சி மலைகள் உயரம் குறைத்தும் இடைவெளிகள் நிறைந்தும் காணப்படுகின்றன. கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு கூறான ஜவ்வாதுமலை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரந்து, விரிந்து காணப்படும் மலைத்தொடராகும். இம்மலை வடக்கே அமித்தியையும், தெற்கே சிங்காரப்பேட்டையையும், கிழக்கே தும்பக்கோட்டையும் (போளுர்), மேற்கே ஆலங்காயத்தையும் எல்லைகளாக்க் கொண்டு காட்சித் தருகிறது. இம்மலையில் 282 சிற்றூர்கள் உள்ளன. இம்மலையில் வேடியப்பன், வேந்தியப்பன், காளியம்மன், திக்கியம்மன், துர்கையம்மன், ஆஞ்சநேயரப்பன், சிவன், முருகன், பெருமாள் என்று ஏராளமான தெய்வங்கள் வணங்கப்பட்டு வருகின்றன. இவ்வாய்வுக் கட்டுரை ஆய்வு எல்லைக் கருதி புதூர் நாட்டிற்கு உட்பட்ட கீழூர் சிற்றூரிலுள்ள வேந்தியப்பன், தப்பிரான் வேட்டைச்சாமி முன்னோர் வழிபாடு ஆகிய தெய்வங்களை ஆராய்கிறது.
Keywords | : நாட்டுப்புறவியல் |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : November 10, 2018 |