Abstract Paper
Title | : சங்க இலக்கியங்களில் பாண்டியர் |
---|---|
Article Information | : Volume 3 - Issue 2 November - 2019) , 55-67 |
Affiliation(s) | : Assistant professor |
Abstract :
பாண்டியர்கள் தென் தமிழ்நாட்டை ஆண்ட அரசு மரபினர் ஆவர். சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமையுடையவர்கள். இவர்கள் சந்திர குலத்தைச் சார்ந்தவர்கள். வேம்பு மாலையை அணிந்தவர்கள். சங்க காலம் தொட்டு பதினேழாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள். பாண்டியர்கள் போல் இவ்வளவு நீண்டகாலம் ஆட்சி புரிந்த அரசு மரபினரை உலக வரலாற்றில் காணவியலாது. பாண்டியர் தோற்றம் குறித்து தெளிவான முடிவு ஏதும் இதுவரை எட்டப்படவில்லை. தொடக்கத்தில் இவர்கள் தொன் மதுரையிலிருந்து ஆட்சி புரிந்தனர். அது குமரிக் கடலில் பஃறுளி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. அது கடல் கோளால்(Tsunami) அழிவுற்றது. பின்னர் கபாடபுரம் அவர்கள் தலைநகராயிற்று. அதையும் கடல் கொண்டு போனது. இறுதியாய் கூடல்நகர் என்று புகழ் பெற்ற தென்மதுரை அவர்கள் தலைநகராயிற்று. இது தாமரை மலர்போல் வடிவமைக்கப் பட்டிருந்தது.
Keywords | : சங்க இலக்கியம் |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : October 30, 2019 |