Abstract Paper
Title | : சங்கப் பாடல்களும் கதைச்சொல்லியின் குரலும் |
---|---|
Article Information | : Volume2 - Issue1 (June - 2018) , 37-41 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
பண்டைப் புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாக விளங்கும் சங்கப் பாடல்கள் திட்டமிட்டு பாடப்பட்டவையாக அல்லாமல், அவை அக்காலப் புலவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடுகளாக அமைந்துள்ளன. ஆண், பெண் புலவர்களும் மன்னனும் பாடியவையாக உள்ள இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. அது அகம் பற்றியது. அகம் புறம் என்று இரண்டாகப் பகுக்கப்பட்டுள்ள பாடல்களில் புறப்பாடல்கள் புலவர்களின் கூற்றுக்களாக இருக்க, அகப்பாடல்கள் தலைவி, தலைவன், தோழி, பாங்கன், செவிலி, நற்றாய், கண்டோர் என பலருடைய குரலாக அமைந்துள்ளன. பாடலில் இது தலைவியின் கூற்று, இது தலைவன் கூற்று என்ற பாகுபாடு இல்லாத நிலையில் பாடலின் பின்புலத்தை வைத்து இது இன்னாரின் கூற்று என்று பாடல்களுக்குக் கூற்று வரையறை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சிந்தனை எவ்வாறு உருவானது? இதை எப்படிச் செய்தார்கள்? என்பன போன்ற வினாக்கள் ஒரு புறமிருக்க உலகில் எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை நாம் பெற்றிருப்பது வியப்பான ஒன்றாகும்.
Keywords | : |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : June 02, 2020 |