Abstract Paper
Journal of
Puthiya Avaiyam
Title | : புராணம் என்ற சொல்லின் பொருண்மை |
---|---|
Article Information | : Volume2 - Issue1 (June - 2018) , 30-36 |
Affiliation(s) | : Assistant Professor |
Abstract :
மனிதனின் ஆழ்மனதுள் பதிந்துள்ள புதைபொருள்கள் பலவாகும். அவற்றுள் காலங்காலமாகக் கையளிக்கப்பட்டு வருகின்ற கதைகள், பாடல்கள் போன்றவையும் அடங்கும். இத்தகைய மரபார்ந்த கதைகளும் பாடல்களும் தொல்பழங்கால மனித இயல்பைப் பிரதிபலிக்க வல்லன. மேற்கண்ட கதைகள், பாடல்கள் போன்றவற்றில் தெய்வச் செயல்களும் அவர்களால் நடைபெறுகின்ற அற்புதச் செயல்களும் போற்றிப் புகழப்பட்டால் அவற்றைப் புராணச் சார்புடையன என வழங்கும் வழக்கம் உள்ளது. இப்புராணம் என்ற சொல்லானது வடமொழியின்கண் வழங்கும் ‘புராணா’ என்ற சொல்லிருந்து வருவிக்கப்பட்ட சொல்லாகும். புராணம் என்ற சொல்லிற்குத் தமிழ் அகராதிகள் இருநிலைகளில் பொருள் தருகின்றன. பழமை, பழங்கதை எனச் சொற்பொருள் தருவது ஒருநிலை. புராணம் என்பதை, ‘கதை, காந்த முதலிய புராணம். இது கலைஞானம் அறுபத்து நான்கில் ஒன்று.
Keywords | : |
---|---|
Document Type | : Research Paper |
Publication date | : June 02, 2020 |