Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : நீதி நூல்களில் முரண்
Author(s) : முனைவர் ம.சரளாதேவி
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 1 - 6
Affiliation(s) : SHC TPT

Abstract :

<p>நீதி நூல்களில் முரண்முனைவர் ம.சரளாதேவி, உதவிப்பேராசிரியர் தமிழ் முதுகலை மற்றும் ஆய்வுத்துறை, தூய நெஞ்சக் கல்லூரி திருப்பத்தூர் வேலூர்-635 601. தமிழ் மொழியில் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வருவது முரண் எனப்படும். எதிர்மறையைக் குறிக்கும் வகையில் யாப்பில் முரண்தொடை என்பது அமைந்துள்ளது. 1.அடி முரண், 2.இணைமுரண், 3.பொழிப்பு முரண், 4.ஒரூஉ முரண், 5.கூழை முரண், 6.மேற்கதுவாய் முரண், 7.கீழ்க்கதுவாய் முரண், 8.முற்று முரண் என்பதன் அடிப்படையில், நீதி நூல்களில் முரண் எந்தெந்த இடங்களில், எதன் அடிப்படையில் இடம்பெற்றுள்ளன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். முரண்ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்தில் மாறுபட்ட சொற்கள் இயைந்து வருவது முரண் எனப்படும். “மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே”(தொல்.பொருள்.1352)அடிதோறும் சொல்லாலும், பொருளாலும் மாறுபடத் தொடுப்பது முரண் தொடையாகும். “செய்யுள் அடிகளில் உள்ள முதற்சீர்களோ ஓர் அடியில் உள்ள சீா்களோ சொல்லாலும் பொருளாலும் எதிர்மறையாக அமைவது முரண்தொடை எனப்படும். பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்” (பொன்மணி மாறன், தமிழ் இலக்கணம், ப.137)பண்புச் சொற்களின் அடிப்படையில் உருவாகும் பெயரடைகள், எதிர்ச் சொல்லையடிப்படையாக வைத்தே எதிர்ப் பெயரடைகள் (opposite) தோன்றுகின்றன. இத்தகைய பெயரடைகள் முரணாகவும் அமைந்து வரும். நல்ல பழம் - கெட்ட பழம்பெரிய பையன் - சின்ன பையன்விசாலமான உள்ளம் - குறுகிய உள்ளம்என்றெல்லாம் வருதல் காணத்தக்கது. அடி முரண்அடிதோறும் சொல்லாலோ, பொருளாலோ முரண்படத் தொடுப்பது அடி முரண் எனப்படும். “இருள்பரந் தன்ன மாநீர் மருங்கில்நிலவுக்குவித் தன்ன வெண்மண லொருசிறைஇரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னைபொன்னி னன்ன நுண்டா துறைக்குஞ்சிறுகுடிப் பரதவர் மடமகள்பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே”இருள்- நிலவு, இரும்பு - பொன், சிறு - பெரு என்று அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வந்துள்ளமையால் அடிமுரண் தொடையாகும். “இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”(குறள்.314)“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை” (குறள்.76)“சிறியோர் பெரும்பிழை செய்தன ராயின் பெரியோர் அப்பிழை பொறுத்தலும் அரிதே” (வெற்றி வேற்கை.32)இன்னா- நன்னயம், அறம் - மறம், பெரியோர் - சிறியோர் என்று அடிதோறும் சொல்லும் பொருளும் மாறுபட்டு வருவது அடிமுரண் தொடையாகும். திருக்குறளில் 15, 38, 79, 94, 99, 155, 250, 314, 333, 369, 371, 672, 861, 963, 966, 1052, 1166, 1225, 1226, 1227 போன்ற இடங்களில் அடிமுரண் தொடை அமைந்துள்ளன. “எழுத்துஅறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்துஅறிவார் காணின் இலையாம் -எழுத்துஅறிவார் ஆயும் கடவுள் அவிர் சடைமுன் கண்டளவில் வீயும் சுரநீர் மிகை”(நன்நெறி.21)“தன்மனை யாளைத் தன்மை இருத்திப் பிறர்மனைக்கு ஏகும் பேதையும் பதரே”(வெற்றி.வேற்கை.70)“தன் ஆயுதமும் தன்கையில் பொருளும் பிறன்கையில் கொடுக்கும் பேதையும் பதரே”(வெற்றி.வேற்கை.71)“பொய்யுடை ஒருவன் சொல்வன் மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே”(வெற்றி.வேற்கை.73)“இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம் வன்சொலால் என்றும் மகிழாதே -பொன்செய் அதிர் வளையாய்! போங்காது அழல்கதிரால் தண்என் கதிர் வரவால் பொங்கும் கடல்” (நன்நெறி.18)“நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ அல்லோர் வரவால் அழுங்குவர் -வல்லோர் திருந்தும் தளிர் காட்டித் தென்றல்வரத் தேமா வருந்தும் கழற்கால் வர”(நன்நெறி.19)“நல்லார் செயுங்கேண்மை நாள்தோறும் நன்றுஆகும் அல்லார் செயுங்கேண்மை ஆகாதே -நல்லாய்கேள் காய்முற்றின் தின்தீங் கனியாம் இளம்தளிர் நாள் போய்முற்றின் என்ஆகிப் போம்” (நன்நெறி.38)“அவையஞ்சி மெய்விதிர் ப்பார் கல்வியும் கல்லார் அவையஞ்சா ஆகுலச் சொல்லும் -நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர் ந்தார் இன்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று” (நீதிநெறி விளக்கம்.6)எழுத்து அறியார் - எழுத்து அறிவார், தன்மனை - பிறன் மனை, தன் - பிறன், பொய் - மெய், இன்சொல் - வன்சொல், நல்லோர் - அல்லோர், நல்லார் - அல்லார், அவையஞ்சி - அவையஞ்சா என்பதன் அடிப்படையில் உலகத்தில் மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் அடிமுரண் தொடை அமைந்துள்ளது. நீதி நூல்களில் அதிகமாக அடி முரண் தொடைகளே அமைந்துள்ளன. இணை முரண்ஓர் அடியில் முதல் இரண்டு சீர்களிலும் முரண்படத் தொடுத்து வருவது இணை முரண் தொடையாகும். “பெருமையும் சிறுமையும் தான் தர வருமே”(வெற்றி.வேற்கை.30)“நன்று என்றும் தீதுஎன்றும் நான்என்றும் தான்என்றும் அன்று என்றும் ஆம்என்றும் ஆகாதே - நின்றநிலை தான் அதுவாம் தத்துவமாம் சம்புஅறுத்தார் யாக்கைக்குப் போனவா தேடும் பொருள்” (நல்வழி.38)“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்”(குறள்.280)“பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த” (குறள்.292)“தேறினும் தேறா விடினும் அழிவின்கண்” (குறள்.876)“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்” (குறள்.941)“ஆக்கமும் கேடும் அதனால் வருவதால்”(குறள்.642)“பரபரப்பி னோடே பலபல செய்தாங்கு கிரவுபகல் பாழுக் கிறைப்ப - ஒருவற்றான் நல்லாற்றில் நூக்கிற் பதறிக் குலைகுலைப எவ்வாற்றான் உய்வார் இவர்” (நீதிநெறி விளக்கம்.90)பெருமை - சிறுமை, நன்று -தீது, மழித்தல் - நீட்டல், பொய்மை - வாய்மை, தேறுதல் - தேறாமை, மிகுதல் - குறைதல், ஆக்கம் - கேடு, இரவு - பகல் என்பதன் அடிப்படையில் நல்லவற்றை உணர் ந்து, கெட்டவற்றை நீக்கி நடக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் வகையில் இணை முரண் தொடைகள் அமைந்துள்ளன. பொழிப்பு முரண்முதல் சீரும் மூன்றாம் சீரும், முரண்படத் தொடுத்து வருவது பொழிப்பு முரண் எனப்படும். “சாதி இரண்டுஒழிய வேறுஇல்லை சாற்றுங்கால்நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்பட்டாங்கில் உள்ள படி”(நல்வழி.2)“ஈவது நன்று தீது ஈயாமை நல்லவர்மேவது நன்று மேவாதாரோடு ஓவாதுகேட்டுத் தலைநிற்க கேடுஇல் உயர் கதிக்கேஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து”(சிறுபஞ்சமூலம்.99)“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்” (குறள்.264)“கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன”(குறள்279)“இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்” (குறள்.987)இட்டார்- இடாதார், ஈவது - ஈயாமை, ஒன்னார்த் - உவந்தாரை, கணைகொடிது - செவ்விது, இன்னா - இனியவே என்று கொடைத் தன்மையின் பொருட்டு பொழிப்பு முரண் தொடை அமைந்துள்ளதை அறிய முடிகின்றது. ஒரூஉ முரண்ஓர்அடியில் முதல் சீரும், நான்காம் சீரும் முரண்படத் தொடுத்து வருவது ஒரூஉ முரண் எனப்படும். “இனியவர் என்சொலினும் இன்சொல்லே இன்னார் கனியும் மொழியும் கடுவே - அனல்கொளுந்தும் வெங்காரம் வெய்தெனினும் நோய்தீர்க்கும் மெய்பொடிப்பச் சிங்கி குளிர்ந்தும் கொலும்” (நீதிநெறி விளக்கம்.59)“தக்கார் வழி கெடாதாகும் தகாதவர் உக்க வழியராய் ஒல்குவார் தக்க இனத்தினான் ஆகும் பழிபுகழ் தம்தம் முனத்தினான் ஆகும் மதி” (சிறுபஞ்சமூலம்.79)“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை”(குறள்.121)“ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்” (குறள்.133)புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை;” (குறள்.298)இனியவர் - இன்னார், தக்கார் - தகாதவர், அடக்கம் - அடங்காமை, ஒழுக்கம்- இழுக்கம், புறந்தூய்மை - அகந்தூய்மை என்று பண்பினை உணர்த்தும் வகையில் ஒரூஉ முரண் அமைந்துள்ளதை அறிய முடிகின்றது. திருக்குறளில் 136,169,200,238,240,290,301,302,379,104,156,971,973 போன்ற இடங்களிலும் ஒரூஉ முரண் அமைந்துள்ளன. கூழை முரண்ஓர்அடியில் முதல் சீரும், இரண்டாம் சீரும், மூன்றாம் சீரும் முரண்படத் தொடுப்பது கூழை முரண் எனப்படும். திருக்குறள், சிறுபஞ்சமூலம், பிற்கால நீதிநூல்களில் கூழை முரண் தொடைகள் இடம்பெறவில்லை என்பதைத் தெளியலாம். மேற்கதுவாய் முரண்ஓர் அடியில் முதல் சீரும், மூன்றாம் சீரும், நான்காம் சீரும் முரண்படத் தொடுப்பது மேற்கதுவாய் முரண் எனப்படும். திருக்குறள், சிறுபஞ்சமூலம், பிற்கால நீதிநூல்களில் மேற்கதுவாய் முரண் தொடைகள் இடம்பெறவில்லை என்பதை அறியமுடிகின்றது. கீழ்க்கதுவாய் முரண்ஓர் அடியில் முதல் சீரும், இரண்டாம் சீரும், நான்காம் சீரும் முரண்படத் தொடுப்பது கீழ்க்கதுவாய் முரண் தொடை எனப்படும். திருக்குறள், சிறுபஞ்சமூலம், பிற்கால நீதிநூல்களில் கீழ்க்கதுவாய் முரண் தொடைகள் இடம்பெறவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. முற்று முரண்ஓர்அடியில் உள்ள எல்லாச் சீர்களும் முரண்பட்டு வரத் தொடுப்பது முற்று முரண் எனப்படும். திருக்குறள், சிறுபஞ்சமூலம், பிற்கால நீதிநூல்களில் முற்று முரண் தொடைகள் இடம்பெறவில்லை என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு, யாப்பைப் பின்பற்றி நீதிநூல்களை ஆராயும் பொழுது மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பதை எடுத்துரைக்கும் வகையில் முரண் தொடை அமைந்துள்ளதை அறிய முடிகின்றது. இதில் சில முரண் தொடைகள் நீதிகளை எடுத்துரைப்பதற்குப் பொருந்தி வராத காரணத்தினால் அவற்றை விட்டு விட்டு மக்கள் வாழ்க்கைக்குரிய நல்ல கருத்துகளை முரண்களோடு ஒப்பிட்டு எடுத்துரைத்திற்கும் பாங்கு மிகவும் சிறப்பிற்குரியதாகும். துணைநின்ற நூல்கள்1. து.அரங்கன், திருக்குறளில் சில இலக்கணக் கூறுகள், திருக்குறள் பதிப்பகம், சென்னை. 20112. ச.அகத்தியலிங்கம், தமிழ்மொழி அமைப்பியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம். 20113. குணசாகரா;, யாப்பருங்கலக்காரிகை, கழக வெளியீடு. தஞ்சை. 19404. ச.வே.சுப்பிரமணியன், தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 20035. ஜெ.நாராயணசாமி, திருக்குறள், சுரதா பதிப்பகம், சென்னை. 20116. கு.கயல்விழி, எளிய தமிழ் இலக்கணம், செந்தமிழ் பதிப்பகம், சென்னை. 20107. ச.மெய்யப்பன், நீதிநூல் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 20098. க.ப.அறவாணன், சிறுபஞ்சமூலம், தமிழ்க்கோட்டம், சென்னை. 20109. பொன்மணிமாறன், தமிழ் இலக்கணம், அடோன் பப்ளிஷிங் குரூப், திருவனந்தபுரம். 2012</p>


Keywords : இலக்கணம்
Document Type : Research Paper
Publication date : May 05, 2017