Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : திருப்பத்தூர் வட்டாரக் கல்வெட்டுகளில் பழந்தமிழ் அளவைச் சொற்கள்
Article Information : Volume 3 - Issue 1 (June - 2019) , 12-19
Affiliation(s) : SHC TPT

Abstract :

இன்றைய அறிவியல் கற்பிக்கும் எண்ணற்ற விந்தைகளைத் தம் அன்றாட வாழ்வியல் சூழலில் எதார்த்தமாகக் கண்டறிந்து செயல்படுத்தியவர்கள் நம் தமிழ்க்குடியினைச் சார்ந்த முன்னோர்களாவர். எழுத்துக்கள் தொடங்கி வானியல் நுட்பங்கள் வரையிலான அனைத்துப் புத்தாக்க முயற்சிகளும் தமிழர் வரலாற்றினுள் அடங்குவனவாகும். அவ்வகையில் அளவை (Measurement)சார்ந்த நுட்பங்களை அறிந்து, தனித்தனிப் பிரிவுகளுக்கேற்ப எண்ணற்ற சொற்களை வகுத்து வைத்திருந்தனர். இச்சொற்களில் பலவற்றை இன்றைக்கும் மக்களது பேச்சு வழக்கத்தில் காணமுடிகின்றது. சில சொற்கள் புழக்கத்தில் இல்லாமலும் அழிவுற்றன. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் நான் மேற்கொண்ட கள ஆய்வில் மூன்று ஊர்களில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள அளவைச் சொற்களை இக்கட்டுரை விவரிக்கின்றது.


Keywords : தொல்லியல்
Document Type : Research Paper
Publication date : June 14, 2019