Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : சங்க இலக்கியத்தில் செவ்வியல் கூறுகள்
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 41-47
Affiliation(s) : SHC TPT

Abstract :

உலக இலக்கியங்கள் யாவுமே மனிதனுக்கு ஏதேனும் ஒரு நற்கருத்தினை எடுத்தியம்புவதற்காகத் தோன்றிய இலக்கியங்களே ஆகும். அதில் குறிப்பிடத்தக்க இலக்கியங்களாகத் தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றிலும் இரண்டாயிரம் ஆண்டைக் கடந்தும் தமிழ் இலக்கிங்களுக்கெல்லாம் முதன்மைச் சிறப்பு பெற்றதாக விளங்குவது சங்க இலக்கியமே. அம்முதன்மைச் சிறப்புப் பெறுவதற்குக் காரணமாக இருப்பது அவ்விலக்கியத்தில் காணலாகும் உலகத்தோரெல்லாம் ஏற்றுக்கொள்ளும் செவ்வியல் கூறுகளே ஆகும். சங்க இலக்கியத்தில் காணப்படும் செவ்வியல் கூறுகளை அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற அடிப்படையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.


Keywords : சங்க இலக்கியம்
Document Type : Research Paper
Publication date : December 19, 2017