Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : விளியின் தேவை
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 61-67
Affiliation(s) : SHC TPT

Abstract :

தமிழில் பெயர்ச்சொற்கள் வேற்றுமைகளை ஏற்று அமைந்து வரும். அப்பெயர்ச்சொற்கள் இரண்டு முறையில் வரும். 1. உருபு முறையில் உணர்த்துவது (ஐ, ஆல், கு, இன், அது, கண்) 2. உருபில்லாமல் உணர்த்துவது(பெயர்-எழுவாய், விளி). இவற்றில் இயல்பு நிலை, திரிபுநிலை என்ற இரண்டு வகை உண்டு. திரிபு பெற்று அமையக் கூடியதாக விளி வேற்றுமை விளங்குகின்றது. மற்ற வேற்றுமைகளிலிருந்து இவ்வேற்றுமை வேறுபடுகின்றது. எனவேதான் விளி வேற்றுமையைத் தொல்காப்பியர் தனி ஓர் இயலாகப் படைத்துள்ளார். எனவே விளி வேற்றுமையின் தேவை எவ்வளவு அவசியமானது என்பதை தொல்காப்பியம், நன்னூல், நேமிநாதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.


Keywords :
Document Type : Research Paper
Publication date : December 19, 2017