Abstract Paper


Journal of Puthiya Avaiyam

Title : இனவரைவியல் நோக்கில் சிறுமலைப் பளியர்
Author(s) : முனைவர் ஆ.பிரபு
Article Information : Volume 1 - Issue 1 (May - 2017) , 38 - 48
Affiliation(s) : SHC TPT

Abstract :

இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கையில் குறைவு தான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும் பகுதிகளில் நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும் அண்மைக்காலம்வரை விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற பகுதிகளில் வாழக்கூடிய மக்களிடமிருந்து வேறுபட்டது என்பது நாம் அறிந்ததே. பெரும்பான்மை மக்களிடமிருந்து விலகி, இயற்கைக்கு ஆதரவான வாழ்க்கையை வனப் பகுதிகளில் வாழ்ந்து வரும் இவர்கள் இன்றளவிலும், அடங்கி ஒடுங்கியே வாழ்கின்றனர். தமிழகத்தைப் பொருத்தமட்டில், மலைப்பகுதிகளில் பலவகையான பழங்குடியினயினர் வாழ்ந்துவருகின்றனர். இன்றைக்குப் பழங்குடியினர்கள் பலர் வேளாண்மை செய்தும் கல்வி கற்றும் ஓரளவுக்குத் தம்வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திக் கொண்டுள்ளனர். அதற்குத் தன்னார்வத் தொண்டுநிறுவனங்கள் பல உதவி வருகின்றன. இருப்பினும் ‘பளியர்’ என்கிற மக்களின் வாழ்க்கை நிலை மிக மோசமான நிலையிலேயே இன்றளவும் உள்ளது. அவ்வகையில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் இயங்கிவரும் ROSI FOUNDATION TRUST என்ற அமைப்பின் உதவியோடு ‘பளியர்’ இன மக்களின் வாழ்வியலை அறியும்பொருட்டு, நான் மேற்கொண்ட கள ஆய்வுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகின்றது.


Keywords : இனவரைவியல்
Document Type : Research Paper
Publication date : May 06, 2017